புத்தகத்தின் தலைப்பு: ஹார்ட் அட்டாக் என்னும் மயோகார்டியல் இன்பார்க்ஸன்
-
TypeEbook
- CategoryAcademic
- Sub CategoryText Book
- StreamMedical Science, Pharmaceutical & Nursing Sciences
இது ஒரு சிறிய விளக்க நூல்.
ஹார்ட் அட்டாக் நோயின் கடினமான பகுதிகளும், இந்த நோயினை அறிந்து கொள்ள வேண்டிய அவசியமும் உள்ள பகுதிகளும், இதில் விளக்கப்பட்டுள்ளன.
ஒரு பணியினைப் பற்றிய அறிவும், தெளிவும், அப்பணியினை செய்திடுதலில் முழுமை பெறும் என்பது, எல்லா பணிகளுக்கும், எல்லா நபர்களுக்கும் பொருந்திவரும் கூற்றுதான்.
நோய் சிகிச்சைக்கும், நோயாளிகளுக்கும், இதுவே பொருந்தும். சென்ற நூற்றாண்டுகளின் உலகப் போர்களின் காலகட்டத்தில் தொடங்கி, இந்த நூற்றாண்டிலும் தொடரும் ஹார்ட் அட்டாக் நோயினை, வென்றிடும் நம்பிக்கையுடன், மருத்துவ அறிவியல் உலகம் இடையறாது உழைத்துக் கொண்டிருக்கிறது.
போர்களில் இறந்த உயிர்கள் அதிகமா, அல்லது ஹார்ட் அட்டாக்கினால் இழந்திட்ட உயிர்கள் அதிகமா என்பது, தெளிவாகத் தெரியவில்லை. உலகப் போர்கள் முடிந்து விட்டாலும், ஹார்ட் அட்டாக் நோய் இன்னும் தொடர்கிறது. பல்வேறு காரணங்களுக்காக, போர்களின் தன்மையும், அவசியமும், குறைந்து வருவதைப் போல, ஹார்ட் அட்டாக் நோயும் வெல்லப்படும் என்ற நம்பிக்கையில், மருத்துவ உலகினர் போராடி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் நம்மால் இயன்ற பணிகளை செய்திடுவோம்.
சிந்திக்கும் மொழியில் கல்வி பயிலுவோம்.
நன்றி!
COMMENTS
No Review found for book with Book title. புத்தகத்தின் தலைப்பு: ஹார்ட் அட்டாக் என்னும் மயோகார்டியல் இன்பார்க்ஸன்