book

MARUNTHILLA MARUTHUVAM

  • TypePrint
  • CategoryAcademic
  • Sub CategoryPhD Thesis/Thesis
  • StreamMedical Science, Pharmaceutical & Nursing Sciences

மருந்தில்லா மருத்துவம் இந்த நூலின் தனிச்சிறப்பு என்பது இயற்கை மருத்துவ சிகிச்சையின் மூலம் நோயாளிகளுக்கு மருந்தின்றி அவர்களின் மனதில் நம்பிக்கை என்னும் மருந்தினை விதைத்து நோயினை குணப்படுத்துதுவதுதான்.

மிக அவசியமான இந்த நூலை மரியாதைக்குரிய நண்பர் பேரா. மரு. தி. செல்வராஜ் எழுதியுள்ளார். இவர் பண்டைய சீனக்கலையான அக்குபஞ்சர் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றமையால் சர்வதேச அங்கீகாரம் பெற்றவராவார். இவருடைய “MODERN MEDICINES AND ALTERNATIVE MEDICINES – A COMPARISION” என்ற  மருத்துவ ஆராய்ச்சி கட்டுரையை ஏற்றுகொண்ட சர்வதேச மாற்றுமுறை மருத்துவ பல்கலைகழகம் இவருக்கு 1997 ம் ஆண்டு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி இவரது சேவையை பாராட்டியதோடு, சர்வதேச பல்கலைகழக பேராசிரியர்  அந்தஸ்தையும் வழங்கி சிறப்பித்தது.

பாரம்பரிய மருத்துவ முறைகளில் மிகுந்த அனுபவம் கொண்ட இவருடைய 40 ஆண்டுகால அனுபவ ஆய்வுகள் அக்குபஞ்சர் மருத்துவம் மட்டுமில்லாது பல்வேறு மாற்றுமுறை மருத்துவ துறைகளிலும் இவருடைய ஆய்வுகள் மேலோங்கி நிற்கிறது. மருத்துவ முறைகளில் பல்வேறு சாதனைகள் செய்தும், பல்வேறு சான்றுகள் பெற்றும் சேவை செய்துவரும் இவர் கி.பி.2030க்குள் நோயில்லா உலகம், மருந்தில்லா உலகம் படைப்பதே தனது லட்சியமாக கொண்டுள்ளார்.

மனித உடலின் சிக்கலான உடற்கூறு மற்றும் மறைபொருளாக இருந்து வந்த இயற்கை மருத்துவ முறையை எல்லோரும் அறிந்து உணரும்படி மிகவும் எளிய நடையில் இந்த நூலில் எழுதியுள்ளார். இம்முயற்சி தமிழ் மருத்துவ துறையில் ஒரு மைல்கல் என்றால் மிகையாகாது. இந்நூல் மருத்துவ துறையினருக்கு குறிப்பாக ALLOPATHY, AYURVEDA, SIIDDHA, UNANI, HOMOEOPATHY போன்ற மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கும், மற்றும் மருத்துவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இன்றைய சூழ்நிலையில் சமுதாய நல்லெண்ணத்தோடு மருத்துவ முறைகளை பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது ஒவ்வொரு மருத்துவரின் கடமையாக இருக்கிறது. இக்கடமைக்கு உட்பட்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு மருத்துவ துறைகளில் ஆய்ந்தறிந்தவைகளையும் தன்னுடைய சிகிச்சை அனுபவங்களையும் இந்நூலில் வெளிப்படுத்தியுள்ளார்.

நான் எல்லோரையும் கேட்டுக்கொள்வது என்னவெனில் உடல் ஆரோக்யத்தை விரும்புபவர்கள் இந்த நூலில் உள்ள இயற்கை மருத்துவ முறைகளையும், யோகாசன முறைகளையும் பின்பற்றி மருந்தில்லா மருத்துவத்தின் மூலம் நீண்ட  நெடிய ஆயுலுடன் நலமோடும், வளமோடும் வாழவேண்டும் என்பதே.

மருத்துவ செய்திகளை துல்லியமாகக் கூறுவது இந்நூலின் தனிச் சிறப்பு. வளர்ந்து வரும் மாற்றுமுறை மருத்துவ இயலுக்கு இந்நூலாசிரியரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. ஒரு மருத்துவ நூலைப் படிக்கிறோம் என்ற உணர்வு தோன்றாதவாறு சொல்கிற உத்தியில் இந் நூலில் நடத்திச் சென்றுள்ளார். நோய் தீர்வதற்குரிய வழிவகைகளை வகுத்துக் கூறும் முறை மிகுந்த பாராட்டுக்குரியது. இந்த அறிய நூலை மக்கள் வாங்கி பயனடைய வேண்டும் என்று விரும்பி டாக்டரின் சேவை தொடர எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளையும் நீங்கா அறிவினையும் கொடுத்து காக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

Buy From
IIP Store ₹ 740
Amazon ₹ 925
Flipkart ₹ 925

**Note: IIP Store is the best place to buy books published by Iterative International Publishers. Price at IIP Store is always less than Amazon, Amazon Kindle, and Flipkart.

Book Title MARUNTHILLA MARUTHUVAM
Author(s) Prof. T. Selvaraj
ISBN 978-1-68576-415-9
Book Language TAMIL
Published Date JUNE, 2023
Total Pages 276
Book Size 7x10 Standard
Paper Quality 75 GSM NORMAL PAPER
Book Edition FIRST

COMMENTS

    No Review found for book with Book title. MARUNTHILLA MARUTHUVAM

LEAVE A Comment

Related Books

Handbook Of Preventive Prosthodontics
Handbook Of Pre..
  • IIP1075,
  • Print
₹ 696 ₹ 870
Add to cart
A GUIDE TO INFECTION PREVENTION AND CONTROL
A GUIDE TO INFE..
  • IIP1106,
  • Print
₹ 880 ₹ 1100
Add to cart
INTERNET OF MEDICAL THINGS (IOMT)
INTERNET OF MED..
  • IIP1194,
  • Print
₹ 144 ₹ 180
Add to cart
WhatsApp Button